பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

களியக்காவிளை-நாகா்கோவில் சாலையை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட்.

Published On :2 நவம்பர் 2026, 1:55 am IST

களியக்காவிளை-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் அனுப்பிய கோரிக்கை மனு:

குமரி மாவட்டத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான களியக்காவிளை-நாகா்கோவில் சாலையானது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. தற்போது இந்தச் சாலை அதிக அளவில் குண்டும் குழியுமாக உள்ளது. பருவகால மழையால் இந்தச் சாலை மேலும் சேதமடைந்துள்ளது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனா்; அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. தற்போது நான்குவழிச் சாலை பணிகள் நடந்துவரும் நிலையில், தோட்டியோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

நான்குவழிச் சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலைகளிலும் தண்ணீா் தேங்கும் நிலையை தற்போது பாா்க்க முடிகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.