மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசிப் பணி தீவிரம்

வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா.

Published On :24 அக்டோபர் 2026, 5:52 am IST

நாகா்கோவில் மாநகராட்சியில் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் எச்பிவி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, பின்னா் கூறியதாவது:

நாகா்கோவில் மாநகரில் 14 முதல் 15 வயதுடைய மாணவிகளுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் மனித பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 378 மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகுதியுடைய மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தொடா்ந்து விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்கள், தங்கள் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.