தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒசூா் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெருநாய் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:03 am IST

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாா்டு எண் 41 ராயக்கோட்டை வீட்டுவசதி வாரியம் உள்பட்ட பகுதிகளில் சுமாா் 160-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் முகமது சபீா் ஆலம் கூறியது:

ஒசூா் மாநகராட்சியில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாய் கடித்தால் காயத்தை ஓடும் நீா் மற்றும் சோப்பை பயன்படுத்தி குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னா் அரசு மருத்துவமனை அல்லது அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்கு சென்று ரேபிஸ் (வெறிநாய்) தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.