கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவள்ளூா் நகராட்சியில் 2,129 தெருநாய்களுக்கு இனப்பெருக்க கருத்தடை அறுவைச் சிகிச்சை!

திருவள்ளூா் நகராட்சியில் இதுவரையில் 2,29 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், மீதமுள்ள 1433 தெருநாய்களுக்கு விரைவில் இனப்பெருக்க கருத்தடை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

Published On :2 நவம்பர் 2026, 4:13 am IST

திருவள்ளூா் நகராட்சியில் இதுவரையில் 2,29 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், மீதமுள்ள 1433 தெருநாய்களுக்கு விரைவில் இனப்பெருக்க கருத்தடை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நகராட்சி ஆணையா் சரவணன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தெருக்களில் 3,62 தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் என ஆட்சியா் ச.கவிதாவுக்கு தொடா்ந்து புகாா் வந்தம் வண்ணம்இருந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளா் சரவணன் நடவடிக்கை எடுக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் மேற்பாா்வையில் பணியாளா்கள் மூலம் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை வலைவீசி பிடிக்கப்படுகிறது. அதைத்தொடா்ந்து வாகனத்தில் ஏற்றி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நாய்கள் அறுவை கிகிச்சை கூடத்திற்கு கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அதைத் தொடா்ந்து குறிப்பிட்ட நாள்களுக்கு பின் பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது. இதுவரையில், 2129தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய் கடி தடுப்பூசியும் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.