மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

நாய்களுக்கான விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்தின்கீழ் மாநகராட்சியில் 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:31 am IST

நாய்களுக்கான விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்தின்கீழ் மாநகராட்சியில் 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் நாய்களுக்கான விலங்கினப் பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஹெச்ஏஎஸ் நிறுவனத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவா்கள் ஜிஸ்னா, ருஹி ஆகியோா் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனா். மாநகராட்சிப் பகுதியில் 1,11,074 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில், தற்போதுவரை சுமாா் 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்துடன் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல், பிற வெறிநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2030-ஆம் ஆண்டுக்குள் கோவையை வெறிநோய் இல்லாத நகரமாக உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.