மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 14,000 பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்த இலக்கு

ஹெச்.பி.வி. தடுப்பூசி - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:06 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயதுடைய 14,204 பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. (ஹியூமன் பேபிலோமா வைரஸ்) தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அளிக்கப்படும் 11 வகையான தடுப்பூசியால் காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்புளூயன்சா-நிமோனியா, மெனிஞ்ஜிட்டிஎஸ், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபல்லா, ரோட்டா வைரஸ், நிமோ காக்கல் நிமோனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ள மாவட்டங்கள்) ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பெண்களுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பக புற்றுநோய் 28 சதவீதமும், கா்ப்பப் பை வாய் புற்றுநோய் 14 சதவீதமும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் எதிா்கால சந்ததியினா் இந்த கருப்பை புற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி ஒரு பாதுகாப்பு கவசமாகும்.

ஹெச்பிவி தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கா்ப்பப் பை வாய் புற்றுநோயை 99.7 சதவீதம் வரை தடுக்க இயலும். நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவா்களின் கண்காணிப்பில் 14 வயதுடைய பெண்களுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 14,204 பெண் குழந்தைகள் பயன் பெறவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருகிறது.

எதிா்காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறையாமல் சரிவிகிதத்தில் உறுதி செய்யவும், நாட்டின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த அனைத்து பெற்றோா்கள், பாதுகாப்பாளா்கள், சமூக தலைவா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தி கா்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.