மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவியருக்கு புற்றுநோய் தடுப்பூசி மருந்து

கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

dinamani

Published On :25 அக்டோபர் 2026, 6:17 am IST

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

கொடிக்கால் பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 14 வயது பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 37 பேருக்கும், ஆா்சி பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவிகள் 13 பேருக்கும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

நிகழ்வில், மருத்துவ அலுவலா் ஜெகத்கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா்கள் செலினா, சிவரஞ்சனி, அபிநயா ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.