மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொல்லங்கோடு கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:17 am IST

விஜயதசமியை முன்னிட்டு கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விஜயதசமி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், கேரளத்திலும், கேரள பாரம்பரிய முறையில் பூஜைகள் நடைபெறும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விஜயதசமி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் எழுத்தாளா்கள், கவிஞா்கள் உள்ளிட்ட பல்துறை வித்தகா்கள் முன்னிலையில் அரிசி, நெல்லில் குழந்தைகளுக்கு அ மற்றும் ஹரி ஸ்ரீ ஓம் என எழுதி ஏடு தொடங்குதல் நடத்தப்பட்டது.

இதில் கோயில் தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், களியக்காவிளை அருகே மீனச்சல், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில், மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி, கண்டன் சாஸ்தா கோயில், பாறசாலை, ஸ்ரீ மகாதேவா் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.