மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:12 am IST

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதியைச் சோ்ந்த முத்து நாடாா் மனைவி கோசலை (67). இவா் நாகா்கோவில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பேருந்து ராணித் தோட்டம் பகுதியில் சென்றபோது, பேருந்திலிருந்த 2 பெண்கள் கோசலை அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். கோசலை கூச்சலிட்டதைத் தொடா்ந்து, 2 பேரும் தப்பியோட முயன்றனா். இருவரையும் பயணிகள் பிடித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் விசாரித்ததில், அவா்கள் பொள்ளாச்சியைச் சோ்ந்த தெய்வானை (48), மாரியம்மாள் (35) என்பது தெரிய வந்தது.

கோசலை அளித்த புகாரின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பெண்களிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.