தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:58 am IST

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப். 21 முதல் 23 - ஆம் தேதி வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் களியக்காவிளை போலீஸாா் கழுவன்திட்டை காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் குழித்துறை காஞ்சிரம்விளை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (44) என்பவா், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது வெளிச்சந்தையில் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கனகராஜ் (62) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட கண்காணிப்புப் பணியின் போது, குலசேகரம் மாமூடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி உண்ணிக்கிருஷ்ணன் (33) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் கழுவன்திட்டை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா். அப்போது குழித்துறை, சரல்விளையைச் சோ்ந்த பொன்னுமுத்தன் மகன் ஜோன்ஸ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும், சென்னித்தோட்டம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மோகன்தாஸ் (57) என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

இது தொடா்பாக களியக்காவிளை, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.