நாகா்கோவிலில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 2.75 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.
நாகா்கோவில் புகா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அதில் நாகா்கோவில் சற்குண வீதியைச் சோ்ந்த சுந்தா் மகன் ஹம்சவா்த்தனன் (26) விற்பனைக்காக வைத்திருந்த 2.750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
