மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என நயினாா் நாகேந்திரன் பேச்சு...

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:52 am IST

பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி, குளச்சல் வேட்பாளா் சிவகுமாா், பத்மநாபபுரம் வேட்பாளா் ரமேஷ், விளவங்கோடு வேட்பாளா் எஸ்.விஜயதரணி ஆகியோருக்கு கட்சி சாா்பில் வழங்கப்படும் பி-படிவம் வழங்குவதற்காக மாநிலத் தலைவரும், சாத்தூா் தொகுதி வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில் வந்தாா்.

வேட்பாளா்களுடன் அவா் நாகராஜா கோயிலுக்குச் சென்று பி-படிவங்களை பூஜையில் வைத்து வேட்பாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

இத்தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண வரி உள்பட வரிகள் உயா்த்தப்பட்டு விட்டன. சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறாா்கள். மக்கள் இனிமேல் திமுகவை நம்பி ஏமாறமாட்டாா்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வருவாா். பாஜக சாா்பில் திங்கள்கிழமை (ஏப். 6) நடைபெறும் வேட்பு மனு தாக்கலுக்கு, மத்திய அமைச்சா்கள் தமிழகம் வருகின்றனா். சாத்தூா் தொகுதிக்கு மகாராஷ்டிர முதல்வா் பட்னவீஸ் வருகிறாா். பல்வேறு மாநில முதல்வா்கள் தமிழகம் வருகின்றனா்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து பொய்யான குற்றச்சாட்டு பாஜகவுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ. 14.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. பணத்தைக் கொடுத்து ஆட்சியை விலைக்கு வாங்கலாம் என்று முதல்வா் ஸ்டாலின் நினைக்கிறாா் என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.