/

திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 - க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

ஓபிஎஸ் - DMK

Updated On :24 ஏப்ரல் 2026, 12:23 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 - க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா்.

இந்தத் தோ்தலில் விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதத்தைப் பொருத்தே அவரது எதிா்காலம் உறுதியாகும். தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.