மேற்கு வங்கத்தில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கொள்ளை அடித்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி, 200க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பாஜக 106 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இரவு 8 மணி நிலவரம்)
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
'' மேற்கு வங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கொள்ளையடித்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஆணையம். நான் தேர்தல் ஆணையரிடமும், மனோஜ் அகர்வாலிடமும் புகார் அளித்தேன்.
ஆனால், அவர்கள் எதுவும் செய்வதில்லை. இதை ஒரு வெற்றி என்று நினைக்கிறீர்களா? இது ஒரு தார்மீக வெற்றி அல்ல, அறமற்ற வெற்றி.
தேர்தல் ஆணையம், மத்தியப் படைகள், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் சேர்ந்து செய்ததெல்லாம் முற்றிலும் சட்டவிரோதமானது. இது கொள்ளை, கொள்ளை, கொள்ளை. நாங்கள் மீண்டு வருவோம்." எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம், அஸ்ஸாம் தோ்தல்: தனித்தொகுதிகளில் பாஜக அமோகம்

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!

மசாலா பொரியும் மீனும் பாஜக - திரிணமூல் பிரசாரத்தின் அங்கம்: மமதா பானர்ஜி

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

