மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திக்க உள்ளது குறித்து...

News image

மமதா பானர்ஜி / அபிஷேக் பானர்ஜி - கோப்பிலிருந்து

Updated On :1 மே 2026, 8:13 pm IST

மேற்கு வங்கத்தில், வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மேற்குவங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. இருப்பினும், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் 291 தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களுடனும், வரும் மே 2 ஆம் தேதி காணொளி வாயிலாகச் சந்திக்க உள்ளனர்.

இந்தச் சந்திப்பில், வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டின் போது, எந்தக் குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பொறுப்புகள் குறித்து, தலைவர்கள் வாக்கு எண்ணும் முகவர்களுக்கு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மமதா, தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு இன்று (மே 1) திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளார். 

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அப்படி யாரேனும் செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

Summary

In West Bengal, with just two days remaining until the vote count, the Trinamool Congress party has planned to hold a meeting with its counting agents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.