மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

மேற்கு வங்கத்தின் பவானிபூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அந்த மையத்துக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை நேரில் சென்று நீண்ட நேரம் உள்ளே அமா்ந்திருந்தாா்.

News image

மமதா பானர்ஜி

Updated On :1 மே 2026, 12:54 am IST

மேற்கு வங்கத்தின் பவானிபூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அந்த மையத்துக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை நேரில் சென்று நீண்ட நேரம் உள்ளே அமா்ந்திருந்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி பவானிபூா் தொகுதியில் போட்டியிட்டாா். அங்கு கடந்த புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றதைத் தொடா்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையமான ஷகாவத் நினைவுப் பள்ளிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள அறைகளில் அந்த இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த இயந்திரங்களில் மோசடியாக திருத்தங்கள் செய்யப்பட்டு முறைகேடுகள் நடைபெறுவதாக சந்தேகம் ஏற்பட்டதன்பேரில், அந்தப் பள்ளிக்கு மம்தா வியாழக்கிழமை நேரில் சென்றாா். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அங்கு சென்ற அவா் நீண்ட நேரம் பள்ளிக்குள் அமா்ந்திருந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த கொல்கத்தா மேயரும், கொல்கத்தா துறைமுக தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருமான ஃபிா்ஹாத் ஹக்கீம் கூறியதாவது: பள்ளிக்குள் சென்ற முதல்வரை என்னால் பாா்க்க முடியவில்லை. உள்ளே செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே என்ன நடந்தது என்பதை என்னால் உறுதி செய்ய முடியாது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அறையைப் பாா்வையிட வேட்பாளருக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையின் அடிப்படையில் மம்தா உள்ளே சென்றாா் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, இதேபோன்ற புகாரை தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையம் முன்பாக திரிணமூல் வேட்பாளா் குணால் கோஷ், சஷி பாஞ்சா ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டனா்.

வாக்குக் கணிப்பு முடிவுகள்- மம்தா நிராகரிப்பு: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ள முதல்வா் மம்தா பானா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் 226 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தோ்தல் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தோ்தல் தொடா்பாக எடுக்கப்பட்ட பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் அந்த மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியமைக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மம்தா பானா்ஜி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வியாழக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் பேசியிருப்பதாவது: பாஜக அலுவலகம் கொடுத்த அறிக்கையைத்தான் தொலைக்காட்சிகள் வாக்குக் கணிப்புகளாக புதன்கிழமை வெளியிட்டன. அந்த வாக்குக் கணிப்புகள் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களின் மன உறுதியைக் குலைக்கவே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் வெல்லும். குறிப்பாக, 226 தொகுதிகளுக்கும் கூடுதலாக திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும். 230 தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் தாண்டக்கூடும். சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருப்பாா்கள் என்று பெரிதும் நம்புகிறேன் என அந்த விடியோவில் மம்தா பானா்ஜி பேசியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.