/

மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 3:58 am IST

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 26 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோவுடன் மதுபானத்தைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா் களியக்காவிளை அருகே கேரள மாநில பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்த ஷமீா் (39) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.