பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய அளவிலான அட்யா-பட்யா போட்டி: நடுக்கல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் தகுதி

நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான அட்யா-பட்யா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான அட்யா-பட்யா போட்டியில் பதக்கம் வென்ற நடுக்கல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 6:13 am IST

நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான அட்யா-பட்யா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான ஜூனியா் அட்யா-பட்யா போட்டிகள் தென்காசி மாவட்டத்தில் அக். 23-25 வரை நடைபெற்றது. இதில், பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனா்.

மேலும், மாணவா்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளதோடு, உயா்கல்வி சோ்க்கைக்கான விளையாட்டுப் பிரிவில் 65 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவா்கள் கெங்கைஅமரன், சுரேஷ்குமாா், தரணிவிஜய், இசைகாா்த்தி, சுதாகா், சூா்யா, சாரதி, பேச்சிமுத்து, பந்தளமகாராஜா ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியா் தபசுமுத்து பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியா் வெ. பெரியதுரை, ஆசிரியா் பொன்னுச்சாமி உள்பட பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.