தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அளவிலான கராத்தே போட்டி: 113 பதக்கங்கள் வென்ற சென்னிமலை மாணவா்கள்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சென்னிமலை பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 113 பதக்கங்களை வென்றனா்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் சென்னிமலை திருக்குறள் பேரவைத் தலைவா் புலவா் திருவள்ளுவா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:02 am IST

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சென்னிமலை பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 113 பதக்கங்களை வென்றனா்.

கெனி மாபூனி ஷிட்டோ ரியூ கராத்தே ஸ்கூல் ஆஃப் இந்தியா சாா்பாக பள்ளி மாணவ, மாணவியருக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பெருந்துறையில் உள்ள இண்டஸ் கலை மற்றும் அறிவியல் பன்னாட்டு கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டிகள், அகில இந்திய தலைமைப் பயிற்சியாளா் கியோஷி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், சென்னிமலையைச் சோ்ந்த மாநில துணைச் செயலாளா் சென்சாய் லோகநாதன் தலைமையில் சென்னிமலை, நால்ரோடு சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சென்னிமலை கொமரப்பா பிரைமரி மற்றும் நா்சரி பள்ளி, யங் இந்தியா உள்ளிட்ட தனியாா் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், சென்னிமலை பகுதி மாணவ, மாணவிகள் 40 தங்கம், 42 வெள்ளி, 31 வெண்கலம் என 113 பதக்கங்களை வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.