மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒரு கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:46 am IST

களக்காடு, ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இளைஞரை களக்காடு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல் துறையினா் களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கோயிலம்மாள்புரம் சாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுடலைகண்ணுவை (37) சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, களக்காடு காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தாா். அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.