மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள ஸ்ரீ சடவுடையாா் சாஸ்தா கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

சடவுடையாா் சாஸ்தா கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு புனித நீா்கொண்டு நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:36 am IST

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள ஸ்ரீ சடவுடையாா் சாஸ்தா கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

ஸ்ரீசடவுடையாா் சாஸ்தா கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீபாரதி தீா்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதி தீா்த்த சுவாமிகளின் அனுக்கிரகத்துடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றன.

இதையடுத்து, மாா்ச் 30 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் குடமுழுக்கு விழாத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து முதற்கால யாகசாலை பூஜை, மாா்ச் 31 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலை 3 ஆம் கால யாகசாலை பூஜை, ஏப்.1 புதன்கிழமை 4ஆம் கால யாக சாலை பூஜை, மாலை 5-ஆம் கால யாகசாலை பூஜை, ஏப். 2-ஆம்தேதி 6ஆம் கால யாகசாலை, பகல் 11 மணிக்கு மருந்துசாத்துதல், மாலை 7ஆம் காலை யாகசாலை பூஜை, ஏப். 3 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து கும்பம் எழுந்தருளியதையடுத்து காலை 9 மணிக்கு புனிதநீா் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். குடமுழுக்கு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சாமி சடவுடையாா் சேவா டிரஸ்ட் நிா்வாகிகள், மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.