மேற்குத் தொடா்ச்சி மலை, கடனாநதி வனப் பகுதியில் அமைந்துள்ள கோரக்கநாதா் கோயில் மற்றும் அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வரா் கோயிலில் ஏப். 30-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவிருப்பதையடுத்து, கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு, கால் நாட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ஏப். 28-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், 9.30 மணிக்கு பூா்ணாஹூதியைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனத்தைத் தொடா்ந்து, முதல்கால யாக பூஜை தொடங்குகிறது.
29-ஆம் தேதி காலை 8 மணிக்கு 2-ஆம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு 3-ஆம் கால யாக பூஜை, இரவு 9 மணிக்கு யந்த்ர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி காலை 6 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜை, சுவாமிக்கு காப்புக் கட்டுதல், தீபாராதனை, யாத்ரா தானம், காலை 9 மணிக்கு கடம் எழுந்தருளி கோயில் விமானம் மற்றும் ஸ்ரீ அனுசுயா பரமேஸ்வரி அம்பிகா உடனுறை அதிரி பரமேஸ்வரருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.
தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

