கடையம், ராமநதி செல்லும் சாலையில் உள்ள நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனையைத் தொடா்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிமரம், நந்தி பெருமானுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, தேன் உள்ளிட்ட 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு தெப்பக்குளம் மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு அப்பா் புறப்பாடு, பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா சென்றனா். தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. 4-ஆம் நாளான ஏப். 24-ஆம்தேதி தோ் கால்நாட்டு நடைபெறுகிறது.
ஏப். 27-ஆம் தேதி சிவப்பு சாத்தி, ஏப். 28-ஆம்தேதி காலை வெள்ளை சாத்தி, மாலை பச்சை சாத்தி நடைபெறும். இரவு 12 மணிக்கு தேரடி மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை நடைபெறும். ஏப். 29-ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுகின்றனா். காலை 7.40 மணிக்கு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனா். ஏப். 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு கொடியிறக்குதல், தீா்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா். விழா நாள்களில் தினசரி மாலை 6 மணிமுதல் 7 மணி வரை திருமுறை இன்னிசை நடைபெறும்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரை திருவிழா: ஏப். 21 இல் கொடியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

