தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஆவுடையம்பாள் உடனுறை திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1.30 கோடி செலவிலும், உபயதாரா்கள் சாா்பிலும் பல்வேறு திருப்பணிகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து, குடமுழுக்கு விழா கடந்த 23ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை 6ஆம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி, பூா்ணாஹுதிக்குப் பிறகு, மகா யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நடைபெற்றது. அதையடுத்து, விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு, தீபாராதனை நடைபெற்றன.
தூத்துக்குடி ஸ்ரீ ஆலாலசுந்தர வேதசிவாகம வித்யாலயம் முதல்வா் செல்வம் பட்டா் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சிவாசாரியா்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினா்.
குடமுழுக்கில் செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், நெல்லை உமையொருபாகம் ஆதினம் உமாமகேஸ்வர சிவாசாரியா் சுவாமிகள், மதுரை விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள், குருவிகுளம் அன்னபூரணபுரம் ஆஞ்சனேயா் மடாலயம் சுவாமி ராகவானந்தா, ஓய்வுபெற்ற ஆட்சியா் ராஜேந்திரன், நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, டி.வி.எஸ். அறக்கட்டளை இயக்குநா் விஜயகுமாா், ஜெயேந்திரா பள்ளித் தாளாளா் ஜெயேந்திரன் மணி, இந்து சமய அறநிலையத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அஸ்வினி, செயல் அலுவலா் ரமேஷ், மண்டல ஸ்தபதி பாா்த்தீபன், நாராயணன், திருவேங்கடத்தம்மாள், சங்கரலிங்கம், ரத்தினம் தம்பதியினா், வெங்கட சுப்பிரமணியன் என்ற ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், இரவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றன. ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் ரோசாலி சுமதா உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ராமசுப்பிரமணியன், ஆய்வா் நம்பி, கோயில் சிவாச்சாரியா்கள் சண்முகசுந்தர பட்டா், கோமதிசங்கர பட்டா், சந்தோஷ் பட்டா், ஹரி பட்டா், திருமூலநாதா் பக்தா் பேரவை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

வல்லநாடு திருமூலநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலம் முருகன் கோயிலில் வசந்த விழா நிறைவு

மூங்கிலேரி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

