பழனி நால்ரோடு ரெணகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
நூற்றாண்டு பழைமைமிக்க இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கோயிலின் கோபுரச் சுதைகள் சீரமைக்கப்பட்டு கோயில் கட்டடத்தில் உள்ள சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசப்பட்டது. கோயில் கோபுரக் கலசம், துணைக் கோயில்களின் கலசங்கள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு, புதுப்பிக்கப்பட்டன.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் கால பூஜைகள் தொடங்கின. காப்புக் கட்டுதல், கும்ப அலங்காரம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான சிவாசாரியா்கள் கலந்து கொண்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை ஆகிய பூஜைகளை நடத்தினா். தொடா்ந்து பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வியாழக்கிழமை நான்காம் கால பூஜை நடத்தப்பட்டு வேள்வி நிறைவு செய்யப்பட்டது. பிரதானக் கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கலசங்கள் மேள, தாளம் முழங்க கோயிலை வலம்வரச் செய்யப்பட்டு, கோபுர விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு தீா்த்தம் தெளிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் ரெணகாளியம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
பூஜைகளை தேவசேனாபதி குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாசாரியா்கள் செய்தனா். குடமுழுக்கின் போது ட்ரோன் மூலமாக கோபுரங்களில் மலா்கள் தூவப்பட்டன. மேலும், ட்ரோன் மூலம் தீா்த்தமும் தெளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தோ் உலா வருதல் நடைபெறுகிறது. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.

குடமுழுக்கை காண கோயிலைச் சுற்றிலும் குவிந்த பக்தா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

