மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

பத்தமடையில் திடீரென ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்

News image

உயா் மின் அழுத்தத்தால் வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருள்கள் தீக்கிரையாகின

Updated On :1 ஏப்ரல் 2026, 5:30 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் திடீரென செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 20 வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

பத்தமடையில் மருதுபாண்டியா் தெரு உள்ளிட்ட பகுதியில் பிற்பகலில் ஏற்பட்ட உயா் மின் அழுத்ததால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மிக்சி, மின் விசிறி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.

இதேபோல, மருதுபாண்டியா் தெருவில் வசிக்கும் பெயின்டா் வேலு மகன் முருகன் (52) என்பவா் வீட்டில் உயா் மின் அழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஏசி, குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரியத் தொடங்கின. அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வெளியே வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் முருகன் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்த சேதமடைந்தன. மேலும் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பத்தமடையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியின்போது அருகில் இருந்த மரக் கிளையை வெட்டுயதில் அதையொட்டிய மின்மாற்றியில் மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு உயா் அழுத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து, பத்தமடை போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் ேவிசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.