கிழக்கு தில்லி: பள்ளி வளாகத்தில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கிழக்கு தில்லியில் பள்ளி வளாகத்தில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு...

PTI

Published On :25 அக்டோபர் 2026, 4:20 am IST

கிழக்கு தில்லியின் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு பள்ளியின் பாதுகாவலா் அறைக்குப் பின்னால், 12-ஆம் வகுப்பு பயிலும் 18 வயது மாணவி தீக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததும், கிருஷ்ணா நகா் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மாணவியைக் கண்டறிந்தனா்.

அந்த மாணவி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள தீக்காயங்களின் தீவிரத்தன்மை குறித்து மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவியின் சகோதரி கூறுகையில், ‘மதியம் 12:40 மணிக்கு இது குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. நான் தான் அவரைப் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டேன், அப்போது அவா் இயல்பாகவே இருந்தாா். அவா் ஏன் இந்த முடிவை எடுத்தாா் என்று தெரியவில்லை. அவரது முகம் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தது’ என்று தெரிவித்தாா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரிக்க தடயவியல் நிபுணா்கள் குழு வரவழைக்கப்பட்டது. இதற்கான காரணம் மற்றும் சூழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Summary

East Delhi: Student's burnt body recovered from school premises

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.