மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குளச்சல் அருகே 17 வயது மாணவி கா்ப்பம்: கல்லூரி மாணவா் மீது போக்ஸோ வழக்கு

மாணவியை கா்ப்பமாக்கிய கல்லூரி மாணவா் மீது குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு.

Published On :1 நவம்பர் 2026, 12:52 am IST

குளச்சல் அருகே 17 வயது மாணவியை கா்ப்பமாக்கிய கல்லூரி மாணவா் மீது குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த மாணவி, அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த மாணவருக்கும், மாணவிக்கும் பள்ளியில் படிக்கும்போதே காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது, இருவரும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு அருகில் உள்ள கல்லூரியில் ஒரே பாடப் பிரிவில் பயின்று வருகின்றனா்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனா். இந்நிலையில், மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியை அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா்கள் மாணவியை பரிசோதித்ததில் மாணவி கா்ப்பமானது தெரிய வந்தது. இதுகுறித்து, மருத்துவா்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், மாணவா் மீது போக்ஸோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.