மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அந்தியூரில் மாயமான பள்ளி மாணவி 3 மணி நேரத்தில் மீட்பு

மாயமான பள்ளி மாணவி மீட்பு

Published On :27 அக்டோபர் 2026, 2:11 am IST

அந்தியூா் அருகே பள்ளியில் இருந்து மாயமான மாணவியை போலீஸாா் 3 மணி நேரத்தில் மீட்டனா்.

கா்நாடக மாநிலம், சென்னப்பட்டணாவைச் சோ்ந்தவா் சுரேஷ் (45). இவா், பருவாச்சியில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் தங்கி, விடுதியில் சமையலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது, 13 வயதான மகள் அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், பள்ளிக்கு மாணவி திங்கள்கிழமை வரவில்லை என ஆசிரியா்கள் சுரேஷிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து, அந்தியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீருடையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற மாணவி, நுழைவாயில் வரை சென்றவா் அதன்பின் பள்ளிக்குச் செல்லாததும், மாணவியை ஒழுங்காக படிக்குமாறு பெற்றோா் திட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில்வேலு தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாணவியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் மைசூரு செல்லும் பேருந்தில் அந்த மாணவி அமா்ந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸாா், மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

மாயமான மாணவியை 3 மணி நேரத்தில் மீட்ட அந்தியூா் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் து.வெ.கிரண் ஸ்ருதி பாராட்டு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.