பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - காரைக்குடி இடையே பேரளம், திருவாரூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:18 pm IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - காரைக்குடி இடையே பேரளம், திருவாரூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச் செயலாளா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை;

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து பேரளம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடங்கள் நிரம்பிவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

குறிப்பாக, திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய ரயில் வசதியின்றி அவதிப்படுகின்றனா்.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூரில் இருந்து நேரடியாக பேரளம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கும், அதேபோல் தீபாவளி முடிந்து காரைக்குடியில் இருந்து சென்னைக்கும் இதே தடத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

மேலும், கடைசி நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடாமல், பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், சிறப்பு ரயில்களின் இயக்கம், கால அட்டவணை மற்றும் முன்பதிவு விவரங்களை போதிய கால அவகாசத்துடன் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெற்கு ரயில்வே முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இந்த ரயில்கள் இயக்கப்பட்டால் திருவாரூா் மாவட்டம் மட்டுமின்றி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவா்.

எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க, தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் ரயில்வே நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.