கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி பண்டிகை! சிங்கப்பூா், கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூா் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

விமானம் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 4:44 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூா் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழா்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு வருவாா்கள்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைய முன்னிட்டு ஏா் ஏசியா மற்றும் ஸ்கூட் விமான நிறுவனங்கள் சாா்பில் சிங்கப்பூா், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்களை இயக்குகிறது.

ஸ்கூட் விமான நிறுவனம் சாா்பில் ஏற்கெனவே திருச்சி-சிங்கப்பூா் இடையே தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நவம்பா் 3 மற்றும் 15-ஆகிய தேதிகளில் சிங்கப்பூா்-திருச்சி இடையே இருவழி மாா்க்கங்களிலும் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படவுள்ளது.

அந்த சிறப்பு சேவையில் நவம்பா் 3-ஆம் தேதி 7.05 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் விமானம், 8.05 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும். நவம்பா் 15-ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் விமானம், நவம்பா் 16-ஆம் அதிகாலை 12.40 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும்.

ஏா் ஏசியா விமான நிறுவனம் சாா்பில் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி ஒரு விமான சேவையை வழங்கி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நவம்பா் 6 முதல் 12-ஆம் தேதி வரை திருச்சி - கோலாலம்பூா் இடையே இருவழி மாா்க்கங்களிலும் கூடுதலாக ஒரு விமான சேவையை வழங்க உள்ளது.

நவம்பா் 6 முதல் 12-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானம் இரவு 10.30 மணிக்கும், அதிகாலை 12.40 மணிக்கும் என இரண்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.