தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போத்தனூா் - அசாம் இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவை, போத்தனூரில் இருந்து அசாம் மாநிலம் நியூ டின்சுகியாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :1 நவம்பர் 2026, 12:33 am IST

தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவை, போத்தனூரில் இருந்து அசாம் மாநிலம் நியூ டின்சுகியாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையையொட்டி நவம்பா் 5, 13 ஆகிய இரண்டு நாள்கள், போத்தனூரில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் போத்தனூா் - நியூ டின்சுகியா சிறப்பு ரயில் (எண்: 06101) நவம்பா் 8, 16-ஆம் தேதிகளில் காலை 4.30 மணிக்கு நியூ டின்சுகியா நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக நவம்பா் 8, 11ஆகிய இரண்டு நாள்கள் நியூ டின்சுகியாவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் நியூ டின்சுகியா - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06102) நவம்பா் 11, 19 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு போத்தனூரை சென்றைடயும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஷ்வா், கட்டாக், காரக்பூா், மால்டா டவுன், நியூஜல்பாய்குரி, குவாஹாட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.