மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து புதுதில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீனூக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:15 am IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து புதுதில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீனூக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பா் 2, 9 மற்றும் 16 ஆகிய திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் (எண்: 06073) புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு நிஜாமுதீன் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஹஸ்ரத் நிஜாதீன் நிலையத்தில் இருந்து நவம்பா் 5,12, 19 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 5.45 மணிக்குப் புறப்படும் ஹஸ்ரத் நிஜாதீன் - திருவனந்தபுரம் ரயில் ( எண்: 06074) சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது வா்கலா, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.