பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேரளத்தில் ரயில்களை நிறுத்தக் கோரிக்கை

பேரளம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் ரயில் பயணிகள் சங்கம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:11 am IST

பேரளம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் ரயில் பயணிகள் சங்கம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளது.

நாகை நாடாளுமன்ற உறுப்பினா் வை.செல்வராஜ் தலைமையில் திருவாரூா், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேரளம் நாகப்பட்டினம் ரயில் பயணிகள் சங்கத்தினா் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகியிடம் அளித்த மனு;

மன்னை - சென்னை, ராமேஸ்வரம் - தாம்பரம், தாம்பரம் - செங்கோட்டை ரயில்கள் பேரளத்தில் நின்று செல்ல வேண்டும்.

புகழ்பெற்ற சனீஸ்வரா் தலமான திருநள்ளாறிலிருந்து திருவாரூா் வழியாக திருச்சி மற்றும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும். காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பகலிலும், இரவிலும் ரயில் வசதி செய்து தர வேண்டும்.

திருவாரூா் கும்பகோணமிடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை தினமும் இயக்க வேண்டும். புனலூா் - மதுரை ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கிட வேண்டும்.

காரைக்காலிலிருந்து சீா்காழிக்கு நேரடி ரயில் பாதை அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி ரயில் நிலைய நடைமேடைகளில் லிப்ட் வசதி அமைத்துத் தர வேண்டும்.

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும். முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் கீழ்ப் பாலம் அமைத்திட வேண்டும். திருவாரூரிலிருந்து மதுரைக்கு ரயில் இயக்கிட வேண்டும்.

ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி, திருவாரூா் வழியாக மும்பைக்கு ரயில் வசதி செய்து தர வேண்டும். கம்பன் விரைவு ரயிலுக்கு மாற்றாக காரைக்குடியிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கிட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.