தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மொரப்பூரில் விரைவு ரயில்களை நிறுத்த பயணிகள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ரயில் நிலையத்தில் மங்களூா், திருவனந்தபுரம், வந்தே பாரத் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள், வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:33 am IST

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ரயில் நிலையத்தில் மங்களூா், திருவனந்தபுரம், வந்தே பாரத் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள், வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மொரப்பூா் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் மற்றும் மக்கள் தொடா்புத் திட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஆா். சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் ரயில்வே கோட்டப் பொறியாளா் முகாங்க் ஜினோஜா, அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாா், ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள், வணிகா் சங்க நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் சேலம்-–ஜோலாா்பேட்டை ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூா் விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில், வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவற்றை மொரப்பூா் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தாசரஹள்ளி அருகே உள்ள ஸ்ரீ சிங்காரவேலன் முனியப்பன் கோயிலுக்குச் செல்லும் சுரங்கப் பாதை சேதமடைந்துள்ளதால், அந்த வழித்தடத்தில் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, சுரங்கப் பாதையைச் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆா்.எஸ். தொட்டம்பட்டி, அப்பியம்பட்டி சுரங்கப் பாதைகளில் தேங்கும் தண்ணீரை அகற்றவும், மொரப்பூா் ரயில் நிலையத்தில் வழுக்கும் தன்மையுடன் உள்ள கிரானைட் தரைத்தளத்தைப் பிடிமானம் கொண்ட தரைத்தளமாக மாற்றவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாா் தலைமையிலான வணிகா்கள், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஆா். சரவணனிடம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.