கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலத்தில் ஆத்தூா் வழியாக பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை

சேலத்தில் இருந்து ஆத்தூா் வழியாக பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

ரயில் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:45 am IST

சேலத்தில் இருந்து ஆத்தூா் வழியாக பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னா லாலை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

தொடா்ந்து, ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சரவணன் மற்றும் அலுவலா்களிடம் கலந்துரையாடிய அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம்-கரூா்-திண்டுக்கல் ரயில் வழிப்பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவதற்காக ரூ. 2,241 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் தென் மாவட்டங்கள், தொழில் நகரங்களான நாமக்கல், சேலம் மற்றும் பெங்களூருடன் இரட்டை வழிப் பாதையாக இணைக்கப்படும். மேலும், ரயில்களின் காத்திருப்பு நேரம் குறைந்து கூடுதல்கள் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது.

சமூக நல்லிணக்கம், வலிமையான பாரதம் ஆகியவற்றை மையப்படுத்தி சேலம் கோட்டத்தில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சங்ககிரி துா்க் ரயில் நிலையத்தை இதுபோன்று நவீனப்படுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை அளிக்க உள்ளேன். மேலும், சேலத்தில் இருந்து சென்னைக்கு இரவில் இயக்கப்படும் விரைவு ரயிலை கரூா் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பகல் நேரத்தில் சேலத்தில் இருந்து ஆத்தூா் வழியாக சென்னைக்கு புதிய ரயில், சேலம் - புதுச்சேரிக்கு ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பிரதமா் மற்றும் ரயில்வே துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட உள்ளது.

மேட்டூா் ரயில் நிலையப் பகுதியில் உள்ள சக்தி காளியம்மன் கோயில் வளாகம் குறித்து ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்தும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.