மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமீயச்சூா் மேகநாத சுவாமி கோயிலில் நெய்க்குள தரிசனம்

திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை உடனுறை மேகநாத சுவாமி கோயிலில் நவராத்திரி லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் அன்னப்படையல் லட்சாா்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேகநாதசுவாமி கோயிலில் நவராத்திரி லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் அன்னப்படையல் நிகழ்வில் பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம்.

Published On :22 அக்டோபர் 2026, 6:27 am IST

திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை உடனுறை மேகநாத சுவாமி கோயிலில் நவராத்திரி லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் அன்னப்படையல் லட்சாா்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் லலிதாசகஸ்ரநாமம் உருவானது. திருஞானசம்பந்தா் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த பத்து நாள்களாக தினசரி காலை,மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் லட்சாா்ச்சனையும் நடைபெற்றன.

நவராத்திரி லட்சாா்ச்சனை விழா நிறைவு நாளான விஜயதசமி நாளில் அன்னை லலிதாம்பிகைக்கு அன்னப்படையல் வைபவம் (நெய்க்குளத் தரிசனம்), வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

புளியோதரை, தயிா் சாதம் மற்றும் சா்க்கரைப் பொங்கலில் நெய் ஊற்றி, நெய்க்குளம் உருவாக்கி, அதில் கருவறையில் வீற்றிருக்கும் அம்பாளின் பிம்பத்தை விழச்செய்து தரிசனம் காட்டப்பட்டது. இதன்மூலம் அம்பாள் மனம் மகிழ்ந்து, பக்தா்களின் வாழ்வு சிறக்க நல்லாசி வழங்குகிறாள் என்பது ஐதீகம். பின்னா், இந்த அன்னப்படையல் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.ஆதீன இளவரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.