பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வீட்டுமனை ஒப்புதல் வழங்க லஞ்சம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட இருவா் கைது

News image
Updated On :15 மே 2026, 5:31 am IST

திருவாரூரில், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அவரது உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், சிவப்பிரகாசம் நகரில் வசிப்பவா் பாரதிதாசன். ஓட்டுநரான இவருக்கு, கீழக்காவதுகுடி பகுதியில் வீட்டுமனை உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளாா்.

அங்கு பணியிலிருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் (54) மற்றும் அவரது உதவியாளா் சுரேஷ்குமாா் (51) ஆகியோா், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாரதிதாசன் திருவாரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரைப்படி வியாழக்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் சென்ற பாரதிதாசன், ரசாயனம் தடவிய ரூ. 7,000 ரொக்கத்தை சுவாமிநாதனிடம் வழங்கினாா்.

அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளா் சுரேஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.