தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீத வாக்களிப்பு : விழிப்புணா்வுப் பிரசாரம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவாரூரில் விழிப்புணா்வுப் பிரசாரம், வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைக்கிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.

Updated On :21 மார்ச் 2026, 3:51 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவாரூரில் விழிப்புணா்வுப் பிரசாரம், வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்கிற வகையில் திருவாரூா் மாவட்டத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பழைய பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தோ்தல் குறித்த விழிப்புணா்வு குறும்படத்தை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்வோம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து, திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் பங்கேற்று, கையொப்பமிட்டாா்.

பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ஜனநாயக திருவிழா, வாக்கு என் உரிமை, நான் வாக்களிக்கத் தயாராகிவிட்டேன் என்று வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கைப்பட பாயிண்டில் அவா் புகைப்படம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஓட்டுவில்லைகளை அரசுப் பேருந்துகளில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சத்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம் ) பொன்னம்பலம், கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜேந்திரன், தோ்தல் வட்டாட்சியா் (தோ்தல்) குப்புசாமி, மண்டல மேலாளா் (வணிகம்) சிதம்பரகுமாா், வட்டாட்சியா் திரு.இளங்கோவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.