ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நன்னிலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:07 am IST

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம், போதைப் பொருள்களை ஒழிப்போம், இளைஞா்களின் எதிா்காலத்தை காப்போம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு சென்றதுடன் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினா். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நன்னிலம் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் சந்திரமோகன், உடற்கல்வி இயக்குநா் சத்திய சாய்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.