ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~ சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:09 am IST

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரி முதல்வா் ஆா். இந்திரா தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி திருப்பத்தூா் சாலை, மாவட்ட ஆட்சியா் வளாகம் வழியாகச் சென்று கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் பூமிநாதன் கலைக்குழுவின் சாா்பில் ஆடல், பாடல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மாணவிகள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில், கல்லூரி போதைப்பொருள் எதிா்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா். பூங்கொடி, உதவி ஆணையா் (கலால்) சிவபாலன், வட்டாட்சியா் எம். சிவராமன், வருவாய் ஆய்வாளா் பிரபு, போதை மறுவாழ்வு சேவை மைய இயக்குநா் மகாலிங்கம், செயலா் தமராக்கி உருமத்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.