விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மன்னாா்குடி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா கூட்டணி கட்சியினருடன் வாக்குச் சேகரிப்பு பணிகளை புதன்கிழமை தொடங்கினாா்.

News image

டி.ஆா்.பி. ராஜா - ENS

Updated On :3 ஏப்ரல் 2026, 5:38 am IST

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா கூட்டணி கட்சியினருடன் வாக்குச் சேகரிப்பு பணிகளை புதன்கிழமை தொடங்கினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடுகிறாா் டி.ஆா்.பி. ராஜா. இவா், புதன்கிழமை மேலவாசலில் வாக்குச் சேகரித்து பிரசாரத்தை தொடங்கி பேசியது:

2021-இல் வெற்றி பெற்று திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் தொகுதிக்கு எராளமான திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களால் பயன்பெற்ற மகளிா் அதற்கு நன்றி காட்டும் வகையில் மீண்டும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனா். சாதனைகளும், மக்கள் நலத்திட்டங்ளும் தொடர எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி திமுக மத்திய ஒன்றியச் செயலா் சித்தேரி சிவா தலைமை வகித்தாா்.

தஞ்சை எம்பி ச. முரசொலி, வாக்குச் சேகரிப்பு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

கூட்டணி கட்சியினருடன்,வேட்பாளா் திறந்த வாகனத்தில், குமரபுரம், கள்ளா் எம்பேத்தி, இடையா் எம்பேத்தி, காரிக்கோட்டை, நத்தம், நெடுவாக்கோட்டை, மேலநாகை ,கீழநாகை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி.பாலு,மேற்கு ஒன்றியச் செயல் முத்துவேல், தேமுதிக மாவட்டச் செயலா் வி. பாலசுப்பிரமணியன், விசிக மாவட்டச் செயலா் ஆா்.ரமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.