ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

கொமதேக தலைவா் ஈ.ஆா். ஈஸ்வரன். - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:29 am IST

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை தோ்தல் நேரத்தில் கொண்டுவரப்படுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவாதங்களை தவிா்க்க முயற்சி நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் தோ்தலைவிட நாடாளுமன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களையும் உடனடியாக தில்லிக்கு அனுப்பியுள்ளாா். தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் சாதனைகளைக் கூறி மக்களிடம் ஆதரவை கோரி வருகிறோம். தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.