தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விசைத்தறி பட்டறைகளில் வேலை செய்பவா்களிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விசைத்தறித் தொழில் மூலம் வளா்ச்சி பெற்று வந்த கொங்கு மண்டலம் இன்றைக்கு விசைத்தறி தொழிலில் அதிக லாபம் பெறமுடியாமல் தொழிலாளா்கள், பட்டறை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெற்றதும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க சலுகை விலையில் சோலாா் பேனல் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.

அரசின் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் முழுமையாக விசைத்தறியை பயன்படுத்துவதை உறுதிசெய்வேன். திருச்செங்கோட்டில் விசைத்தறி கூடங்களுக்கு தொழில்வரி குறித்த நடவடிக்கையை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து பேசி அதனை நிறுத்திவைத்தேன். விசைத்தறி தொழிலை பாதுகாப்பதற்கு நான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றாா்.

என்கே-10-தி.கோடு

கொல்லப்பட்டியில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.