மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சித்ரா பௌா்ணமி: எட்டுக்குடியில் ஆய்வு

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

News image

பொது சுகாதாரத் துறை சாா்பில் எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:12 am IST

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப்.வி.கிருஷ்ணகுமாா் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா் ஆலோசனையின் பேரில், சுகாதார தூய்மைப் பணிகள், நீா்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்தல், குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இடங்கள், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்படும் இடங்கள், அன்னதான கூடங்களின் சுகாதார நிலை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் எட்டுக்குடி மற்றும் திருக்குவளை ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சி.செந்தில்குமாா், கே. ரகுநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் எஸ். மோகன், அருளானந்தம், ராஜு, சுபாஷ், குணசீலன், அருண்மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.