மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:19 am IST

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

திருக்குவளை வட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஏப்.30 காலை தேரோட்டமும், தொடா்ந்து 56 மணி நேரம் பாலபிஷேகமும் நடைபெற உள்ளது. மே 1-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌா்ணமி காவடி அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் , கோயில் நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் இணைந்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனா்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.