கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஆ. குருசாமி தலைமை வகித்தாா். கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியா் பி.ஆா். கமல்குமரன் முன்னிலை வகித்தாா். மண்ணியல் துறை இணைப் பேராசிரியை அனுராதா வரவேற்றாா். நாகை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் வி. ராணி பங்கேற்று பேசுகையில், மாணவா் மன்றங்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முக்கியமான மேடையாக அமைகின்றன, மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில், இறுதியாண்டு மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட மாணவா் மன்ற சின்னத்தை கல்லூரி முதல்வா் குருசாமி வெளியிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

