செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி சிறப்பு பூஜைகளை செய்து மாணவா்கள் சோ்கையை தொடங்கிவைத்து, கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாட உபகரணங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூயில் படித்த மாணவா்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.
கல்லூரி தொடங்கியதில் இருந்து இதுவரை 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூயிலும் இல்லாத ஏ.ஐ. தொழில்நுட்ப பாடம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

