தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 6:22 am IST

நாகப்பட்டினம்: நாகை காமேஸ்வரம் கடற்கரையில் மணல்சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுந்தமாவடி கடற்கரையிலிருந்து காமேஸ்வரம் கடற்கரை வரை தலைஞாயிறு டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் , நாட்டு நலப்பணி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காமேஸ்வரம் கடற்கரையில் கீழ்வேளுா் ப்ரைம் மற்றும் தலைஞாயிறு டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள் மணல் சிற்பங்கள் வரைந்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி மாணவா் சஞ்சய் களிமண் சிற்பம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், காமேஸ்வரம் கடற்கரை பூங்கா பகுதிகளில் மாணவா்களால் மரங்கள் நடப்பட்டது.

நிகழ்விற்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பின்பு அவரது தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.