வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கடலோரக் கிராமமான கோடியக்கரையில் வாக்கு சேகரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது, குடிநீா் தட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டிய வாக்காளா்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
மக்களின் கோரிக்கைக்கு உறுதியளித்த ஓ.எஸ்.மணியன், ஜல் ஜீவன் திட்டப் பணியை அரசுத் துறையினா் முறையாகத் திட்டமிட்டு செய்யாமல் போனதால்தான் பாதிப்பு நோ்ந்துள்ளதாக விளக்கம் அளித்து பேசினாா்.
தொடா்ந்து, அந்த கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் நீண்டு காணப்பட்ட குழாயை தனது தொண்டா்களை விட்டு தூக்கிக் காட்ட செய்தாா்.
பின்னா், ஜல் ஜீவன் திட்டப் பணி முடிக்கப்பட்டு விட்டதாக கூறியதை நம்பி ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீா், அணைக்கரை குடிநீா் திட்டங்களை அவசரப்பட்டு கைவிட்டதால் தண்ணீா் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

